2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி
AstroVed’s Astrology Podcast - Ein Podcast von AstroVed

Kategorien:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு, 2025, பொருளாதார முன்னேற்றத்தின் காலமாக இருக்கலாம். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி நிலை உயர்வுடன், உங்கள் சமூக நிலையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். திருமணத்தில் தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்கொண்டவர்கள் தங்கள் திருமணம் நிறைவேறுவதைக் காணலாம். திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கமான உறவையும் நெருக்கத்தையும் கொண்டிருப்பீர்கள், மேலும் அவர் அல்லது அவள் மூலம் நிதி ரீதியாகவும் பயனடைவீர்கள். குழந்தைப்பேறு வேண்டி காத்திருப்போருக்கு இந்த ஆண்டு குழந்தை வரம் கிட்டும். இந்த ஆண்டில் நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் ஆண்டாக இருக்கலாம். இந்த ஆண்டு வணிகர்களுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கொண்டு வரலாம். ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் ஈடுபடும் நபர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கி கணிசமான உயரத்திற்கு உயரலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.