துலாம் மார்ச் 2025 மாத ராசி பலன்

AstroVed’s Astrology Podcast - Ein Podcast von AstroVed - Freitags

இந்த மாதம் செழிப்புடன் இருப்பீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காதலர்களுக்கு  மகிழ்ச்சி நிறைந்த  மாதமாக இருக்கும். நீங்கள் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அதன் பசுமையான நினைவுகள் உங்கள்  வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு செலுத்துவீர்கள். அது  உங்கள் உறவுக்கு அழகை சேர்க்கும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் இருக்கும். நல்ல புரிந்துணர்வு காரணமாக குடும்பத்தில் அமைதி நிலவும். அது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிநிலை மேம்படும். பணத்தை நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். இந்த மாதம் வரும் சேமிப்பு சார்ந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பங்கு வர்த்தக முதலீடுகளை தவிர்க்கவும். இந்த மாதம் வேலை மாற்றம் இருக்கலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம்  காண்பீர்கள் என்றாலும் சில தடைகளை சந்திப்பீர்கள். ஊடகங்கள் மற்றும் திரைத் துறையில் உள்ளவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனை அறுவடை செய்ய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், உற்பத்தித் துறையில் உள்ள துலாம் வல்லுநர்கள் தகுதிக்கேற்ற  வெகுமதியைப் பெறுவார்கள், மருத்துவத்  துறையில் உள்ளவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். ஆராய்ச்சித் துறை துலாம் ராசிக்காரர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளுக்கு மகத்தான அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளைப் பெறுவார்கள். தொழிலில் குறைந்த முதலீடுகளைப் போடவும். கூட்டுத் தொழிலை தவிர்க்கவும். தொழில் குறித்த முடிவுகளை சுயாதீனமாக எடுக்கவும்.  உங்களுக்கு சர்க்கரை மற்றும் நீரிழிவு போன்ற சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம், உணவு கட்டுப்பாடு, நீரிழிவு பிரச்சினைகளில் இருந்து மீள உதவும்.கல்லூரிப் படிப்பு படிக்கும் மாணவர்கள்  உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சிறந்து விளங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

Visit the podcast's native language site